உள்ளூர் செய்திகள்

ஊற்றுக்குழி அரசு பள்ளி மாணவர்களை இடம் மாற்ற பெற்றோர் எதிர்ப்பு

Published On 2022-06-14 15:20 IST   |   Update On 2022-06-14 15:20:00 IST
  • ஊற்றுக்குழி அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் 100 வருடம் பழமை வாய்ந்தது.
  • ஊற்றுக்குழி பள்ளி மாணவர்களை பிலாக்கோடு பள்ளிக்கு மாற்றுவதற்கு ஆசிரியர்கள் முயற்சித்தனர்.

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே உள்ளது ஊற்றுக்குழி அரசு தொடக்கப்பள்ளி.இந்த பள்ளிக்கட்டிடம் 100 வருடம் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. கட்டிடம் பராமரிப்பு பணிகள் நடந்து பல வருடங்கள் ஆகிறது எனவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த பள்ளியில் 37 மாணவர்கள் உள்ளனர். பள்ளி கோடை விடுமுறையில் இந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் பாதுகாப்பு கருதி மாணவர்களை பிலாக்கோடு அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதியில் செயல்பட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து இன்று ஊற்றுக்குழி பள்ளி மாணவர்களை பிலாக்கோடு பள்ளிக்கு மாற்றுவதற்கு ஆசிரியர்கள் முயற்சித்தனர்.

தகவலறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டனர்.

உடனே குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் விரைந்து சென்று பள்ளி தலைமையாசிரியை தங்கம் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு முடிவில் பள்ளி கட்டிடம் பராமரிப்பு செய்வது எனவும், பராமரிப்பு பணிகள் முடியும்வரை வகுப்புகளை அங்குள்ள சமூக நலக்கூடத்தில் நடத்துவது எனவும் சுமூக முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News