உள்ளூர் செய்திகள்

தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி

Published On 2023-01-19 06:21 GMT   |   Update On 2023-01-19 06:21 GMT
  • தை அமாவாசையான நாளை மறுநாள் அதிகாலை 4 மணி முதல் மாலை வரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள்
  • தை அமாவாசையை யொட்டி நாளை மறுநாள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வட சேரி, வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகின்றன

கன்னியாகுமரி :

தை அமாவாசையை யொட்டி கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நாளைமறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. பகவதி அம்மன்கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

தை அமாவாசையான நாளை மறுநாள் அதிகாலை 4 மணி முதல் மாலை வரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். தை அமாவாசையையொட்டி நாளை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூல ஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால்அபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீபலிபூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்படுகிறது.

அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.தை அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரவு 8.30 மணிக்கு பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் போது பக்தர்கள் வழிநடுகிலும் தேங்காய்பழம் படைத்து திருக்கணம்சாத்தி வழிபடுவார்கள்.

அம்மன்வீதி உலாமுடிந்த பிறகு இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆரா ட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும். கோவிலின் கிழக்குவாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும்நடக்கிறது.

அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரசெய்கிறார்கள்.பின்னர்அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் ஞனசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

மேலும் தை அமாவாசையை யொட்டி நாளை மறுநாள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வட சேரி, வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகின்றன. கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம்சார்பில்சுகாதாரவசதிகள்செய்யஏற்பாடுகள்நடந்துவருகின்றன. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News