உள்ளூர் செய்திகள்

அருணாச்சலா மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Published On 2023-09-28 07:14 GMT   |   Update On 2023-09-28 07:14 GMT
  • கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவஹர் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து சிறப்புரையாற்றினார்.
  • கருத்தரங்கில் 267 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன

மணவாளக்குறிச்சி :

வெள்ளிச்சந்தைஅருகில் உள்ள அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் கிருஷ்ணசுவாமி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் விஜிமலர் தலைமை தாங்கினார்.

கேரள பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் பிரசாரா மற்றும் பெங்களூர் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் நூர்நிகார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவஹர் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து சிறப்புரையாற்றினார்.

கல்லூரி துணை தலைவர் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்குநர் தருண் சுரத் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் 267 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக சுங்கான்கடை அய்யப்பா கல்லூரி பேராசிரியை காயத்ரி, பெண்கள் கிறித்தவ கல்லூரி பேராசிரியை கிறிஸ்டி கிரேஸ், பெங்களூர் டி சேல்ஸ் கல்லூரி பேராசிரியை அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News