உள்ளூர் செய்திகள்

நாகர். டிக்கெட் கவுண்டரில் தகராறு - வடமாநில ரெயில்வே ஊழியர் மீது நடவடிக்கை

Published On 2023-02-23 07:13 GMT   |   Update On 2023-02-23 07:13 GMT
  • ரெயில் நிலையத்தில் 8 டிக்கெட் கவுண்டரில் தற்பொழுது 3 கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்கள் வழங்குகின்றனர்
  • டிக்கெட் கவுண்டர்களில் வடமாநில ஊழியர்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை

நாகர்கோவில் :

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், கோவை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ரெயில் நிலையத்தில் 8 டிக்கெட் கவுண்டர்கள் உள்ளது. தற்பொழுது 3 கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்கள் வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் கவுண்டரில் வட மாநில ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார்.

அப்போது டிக்கெட் எடுக்க வந்த பயணி ஒருவரின் சந்தேகங்களுக்கு பணியில் இருந்த வட மாநில ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் பயணிகளுக்கும் வடமாநில ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை அங்கிருந்த சக பயணிகள் வீடியோவில் பதிவு செய்தனர். தற்பொ ழுது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வருகிறது. நடந்த சம்பவம் குறித்து ரெயில் பயணிகள் ெரயில்வே அதிகாரியிடமும் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் செய்துள்ளனர்.

புகாரின் பேரில் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் பயணிகளுக்கிடையே நடந்த சம்பவம் குறித்துரெயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ரெயில்வே ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் டிக்கெட் கவுண்டர்களில் வடமாநில ஊழியர்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. டிக்கெட் எடுக்க வருகை தரும் பயணி கள் சிரமத்திற்கு ஆளா கிறார்கள். எனவே டிக்கெட் முன் பதிவு மையங் களில் வட்டார மொழி தெரிந்த பணியா ளர்களை நியமனம் செய்ய வேண் டும் என்று சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News