உள்ளூர் செய்திகள்

தக்கலையில் இருந்து 3 குழந்தைகளுடன் மாயமான பெண் மீட்பு

Published On 2023-06-07 07:21 GMT   |   Update On 2023-06-07 07:21 GMT
  • செல்போன் சிக்னல் மூலம் சென்னையில் இருந்தது கண்டுபிடிப்பு
  • கடந்த 1-ந் தேதி, 3 மகள்களுடன் சுபலெஜா மாயமானார்.

நாகர்கோவில் :

தக்கலை அருகே உள்ள கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பபாபு. மத்திய ரிசர்வ் போலீசில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி சுபலெஜா (வயது 38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அய்யப்ப பாபுவுக்கு மது பழக்கம் இருந்ததால், கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி, 3 மகள்களுடன் சுபலெஜா மாயமானார்.

இதுகுறித்து அவரது தந்தை அய்யப்பன், தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெகபர் விசாரணை நடத்தினர். சுபலெஜாவின் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போது, அவர் சென்னையில் இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் சென்னை சென்று அவர்களை மீட்டு தக்கலை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். போலீசார் விசாரணையில், தனது கணவர் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதால் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை சென்றதாக வும் கோவிலுக்கு சென்று ஓய்வு எடுக்கும் போது தனது மனம் மாறியதாகவும் அதன் பிறகு தற்கொலை முடிவை மாற்றியதாகவும் சுபலெஜா போலீசாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News