உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் சங்க தலைவர் காமராஜ் பேசியபோது எடுத்த படம்.

குமரி மாவட்ட இந்து நாடார் சங்க பொதுக்குழு கூட்டம்

Published On 2022-10-30 12:44 IST   |   Update On 2022-10-30 12:44:00 IST
  • இந்து நாடார் மாநாடு நடத்திடவும் ஆவண செய்யப்படும் என தீர்மானம்
  • 2021-2022-ம் ஆண்டிற்கான நிர்வாக ஆண்டறிக்கை, வரவு, செலவு பொதுக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.

கன்னியாகுமரி:

குமரி மாவட்ட இந்து நாடார் சங்கத்தின் 2022-ம் ஆண்டிற் கான பொதுக் குழு கூட்டம் நாகர் கோவில் சான்றோர் நகர் ஜெக நாதன் தெருவில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் சுபாஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கான நிர்வாக ஆண்டறிக்கையை சங்கத் தின் பொதுச் செயலா ளர் பாரத் சிங் அவர்க ளால் வாசித்து அங்கீகரிக்கப் பட்டது. 2021-2022 நிதி ஆண்டிற்கான வரவு, செல வினை சங்கப் பொருளாளர் ராஜதுரை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு பொதுக் குழுவில் அங்கீகரிக்கப் பட்டது. கூட்ட தீர்மானத் தில் காலஞ்சென்ற சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இந்து நாடார் வரலாறு, சமுதாய மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், தொழில் துறை மற்றும் விளையாட்டு துறைகளில் முன்னேற்றம் பெற்றிடவும், இந்து நாடார் மாநாடு நடத்திடவும் ஆவண செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் ஜெயபிரம்ஆனந்த், இனச்செயலாளர் தர்மலிங் கம் என்ற உடையார், செயற் குழு உறுப்பினர்கள் ரெத்தி னாகரன், பூபதி, கனகநா தன், தமிழ்செல்வன், சுரேந்திரகுமார், முத்தரசு, சிவகுரு குற்றாலம், சுயம்பு, தங்கமுருகேசன், பாபுராஜேந்திர பிரசாத், செல்வமணி என்ற மணி, செல்வன், டாக்டர். ஹரிஹர சுதன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியில் சங்க துணைத் தலைவர் பொறியாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News