உள்ளூர் செய்திகள்

வடக்கு தாமரைகுளம் முத்துமாகாளி தசரா குழுவினரின் காளி பூஜை

Published On 2023-10-17 07:23 GMT   |   Update On 2023-10-17 07:23 GMT
  • சமபந்தி விருந்தை வழக்கறிஞர் தாமரைபாரதி தொடங்கி வைத்தார்
  • மாலை அணிந்து விரதம் இருக்கும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்

தென்தாமரைகுளம் :

வடக்குதாமரைகுளம் ஸ்ரீ முத்துமாகாளி தசரா குழுவினரின் காளி பூஜை நிகழ்ச்சியில் தி.மு.க. வர்த்தகர் அணியின் மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரைபாரதி கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தினை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட பிரதிநிதி தனசம்பத், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.ராஜா, ஊராட்சி தலைவர் ஆறுமுகம் பிள்ளை, பண்ணையார் சமுதாய தலைவரும், கிளை செயலாளருமான சுடலைமணி, கிளை செயலாளர் மணி, கிளை பிரதிநிதி இளங்கோ, தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பா ளர் சுதன்மணி உட்பட பொது மக்கள் மற்றும் தசராவிற்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News