உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

Published On 2023-09-25 07:24 GMT   |   Update On 2023-09-25 07:24 GMT
  • வேன்களில் ஊர்வலமாக கொண்டு சென்றதால் பலத்த பாதுகாப்பு
  • 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஸ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், கடந்த 3 நாட்களாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டு வருகின்றன.

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த 108 விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று பிற்பகல் சுசீந்திரத்து க்கு கார், வேன், லாரி, மினிலாரி, டெம்போ, ஜீப், டிரக்கர் போன்ற வாக னங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு தாணுமாலய சுவாமி கோவில் முன்பு இருந்து இந்த சிலைகள் கன்னியாகுமரிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகன ங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் திரளாக பங்கேற்றனர். வழுக்கம்பாறை, ஈத்த ங்காடு, பொற்றையடி, மந்தாரம்புதூர், அச்சங்கு ளம், கொட்டாரம், பெருமா ள்புரம், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு,

பரமார்த்தலிங்கபுரம், பழத்தோட்டம் சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு வழியாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரையை ஊர்வலம் சென்றடைந்தது.

அங்கு 108 விநாயகர் சிலைகளுக்கும் மகா தீபாரதனை நடந்தது. அதன் பின்னர் முக்கடல் சங்கமத்தில் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் பூஜையில் வைத்திருந்த விநாயகர் சிலைகளையும் சிலர் குடும்பத்துடன் எடுத்து வந்து கன்னியாகுமரி கடலில் கரைத்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பலவானபுரத்தில் இருந்து விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து நேற்று மாலை கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலை கரைப்பை யொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்குள் இறங்கி நின்று விநாயகர் சிலையை பாதுகாப்பாக கரைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படைவீரர்களும் பாதுகா ப்பில் பங்கேற்றனர்.

குருந்தன்கோடு, இர ணியல், இரணியல்கோணம், திங்கள்நகர், பிலாக்கோடு, ஊற்றுக்குழி, தலக்குளம், கீழவிளை உட்பட சுற்று வட்டார கோயில்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் திங்கள் நகர் இராதாகிருஷ்ணன் கோவில் முன்பிருந்து மண்டைக்காடு நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. காலை 11 மணியில் இருந்தே பல்வேறு இடங்களில் இருந்தும் வந்த 120-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள தாளத்துடன் அலங்கரி க்கபட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.

பின்னர் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் முன்பிருந்து பக்தர்கள் ஆடிப்பாட ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மண்டைக்காடு பகுதியில் உள்ள கடலில் கரைக்க ப்பட்டது. ஊர்வலத்தை யொட்டி ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட கரு ங்கல், பாலப்பள்ளம், கிள்ளியூர், நல்லூர், உண்ணாமலைக்கடை, கீழ்குளம் பேரூராட்சிகள் மற்றும் பாலூர், மத்திகோடு, திப்பிரமலை, கொல்லஞ்சி, மிடாலம், நட்டாலம் போன்ற ஊராட்சி பகுதிகளில் கடந்த வாரம் 116 விநாயகர் சிலைகள் பூஜையில் வைக்கப்பட்டு இருந்தன.

அவை வாகனங்கள் மூல மாக ஊர்வலமாக கருங்கல் கூனாலுமூடு தர்ம சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து பாலூர், திருஞானபுரம், மா ங்கன்றுவிளை, மங்கலக்கு ன்று, தேவிகோடு, உதயமா ர்த்தாண்டம் வழியாக மிடா லம் கடற்கரைக்கு சென்றது. அங்கு பஜனை மற்றும் பூஜைக்கு பின் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

இவ்வ ஊர்வலத்தை யொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாதவகையில் கருங்கல் காவல் ஆய்வாளர் இசக்கி துரை தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News