உள்ளூர் செய்திகள்

துறைமுகம் மூடப்பட்டதால் மீனவர்கள் பாதிப்பு

Published On 2022-09-03 09:47 GMT   |   Update On 2022-09-03 09:47 GMT
  • 9 விசைப்படகுகள் மீன்கள் இறக்க முடியாமல் முகத்துவாரத்தில் நிறுத்தம்
  • தடயை மீறி சிறிய வள்ளங்களில் சிலர் செல்வதால் குழப்பம்

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி மீன வர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் மீன்பிடித்துறைமுக கட்டுமான பணி தொடங்கும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர். இதனால் நேற்று முன்தினம் மீன் பிடித்து வந்த 3 விசைப்படகுகள் மீன்களை இறக்க முடியாமல் முகத்து வாரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மேலும் 6 விசைப்படகுகள் வந்துள் ளது. இந்த 9 விசைப் படகுகளில் பிடித்து வந்த மீன்களை இறக்கி விற்பனை செய்வதற்கு தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் முயற்சித்துள்ளனர்.

இதற்கு மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டதை தொடர்ந்து விசைப்படகுகள் துறை முக ஓரத்தில் நிறுத்தப்ப ட்டுள்ளது. இந்த விசைப்படகுகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள மீன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் பிடித்து வந்த மீனை விற்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இனையம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் துறைமுக கட்டுமானப் பணிகள் தொடங்கும் வரை துறைமுகத்தை திறக்க கூடாது என கூறியுள்ளனர்.

அதே நேரம் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் சின்ன முட்டம், குளச்சல் போன்ற துறைமுகங்களில் சென்று மீன்பிடிப்பதற்கு கடினமாக இருக்கிறது என கூறி இந்த துறைமுகத்தை உடனே திறக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால் இரு மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மாறி மாறி கருத்துக்களை தெரிவிப்பதால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மீனவர் குறை தீர்ப்பு கூட்டத்திலும் எதிரொலித்தது.

தற்பொழுது துறைமுக நுழைவாயிலில் உள்ள செக்போஸ்டை மூடி உள்ளதால் இருசக்கர வாகனங்களும் கார் டெம்போ போன்ற எந்த வாகனங்களையும் உள்ளே விடாமல் அடைத்து வைத்துள்ளதால் மீனவர்கள் துறைமுகத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தற்பொழுது வானிலை மிகவும் மோசமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என வலியுறுத்தியும் அதைக் கேட்காமல் சிலர் சிறிய வள்ளங்களில் சென்றுமீன் பிடிப்பதும் மீனவர்களிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News