உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே படகு கம்பி குத்தி மீனவர் படுகாயம்

Published On 2022-06-29 07:04 GMT   |   Update On 2022-06-29 07:04 GMT
  • 10 பேர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்
  • இரும்பு கம்பி உடைந்து விழும் போது அந்த கம்பி மீனவர் ஜெபியின் தலை மீது விழுந்ததால் அவரது மண்டை உடைந்தது

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சகாய அந்தோணி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கன்னியாகுமரி லூர்து மாதா தெருவைச் சேர்ந்த ஜெபி (வயது 18) என்பவர் உள்பட 10 பேர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் சுமார் 33 நாட்டிங்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடிப்பதற்காக வலையை விரித்தனர். அப்போது விசைப்படகில் உள்ள வலையை இழுக்க பயன்படுத்தும் கம்பியில் இருந்த இரும்பு கம்பி உடைந்து கீழே விழுந்தது.

அந்த கம்பி மீனவர் ஜெபியின் தலை மீது விழுந்ததால் அவரது மண்டை உடைந்தது. உடனே அவரை அதே விசைப்படகில் கரைக்கு அழைத்து வந்தனர். சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News