உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே நரிக்குளத்தில் வெள்ளத்தில் சிக்கிய 5பேரை மீட்ட தீயணைக்கும் படை வீரர்கள்

Published On 2023-09-16 13:08 IST   |   Update On 2023-09-16 13:08:00 IST
  • 16 தீயணைக்கும் படை வீரர்கள் பங்கேற்றனர்.
  • சுமார் ஒரு மணி நேரம் இந்த ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி அருகே உள்ள நரிக்குளத்தில் நடந்தது.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரிஅருகே உள்ள நரிக்குளத்தில் வெள்ளத்தில் சிக்குபவர் களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குனர் ஆபாஷ் குமார், குமரிமாவட்டகலெக்டர் ஸ்ரீதர் ஆகியோரின் உத்தரவின் பேரில் குமரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் தலைமையில் 16 தீயணைக்கும் படை வீரர்கள் பங்கேற்றனர். அப்போது நரிக்குளத்தில்வெள்ளத்தில் சிக்கிஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5பேரை தீயணைக்கும் படைவீர்கள் மீட்பு மிதவை படகு மூலம் ஆழமான பகுதிக்குச் சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த காட்சியை தீயணைக்கும் படை வீரர்கள் தத்ரூபமாக நடத்திகாட்டினார்கள். அதன் பிறகு அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் காட்சியும் நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்த காட்சியைப் பார்த்த பொதுமக்கள் உண்மை சம்பவம் போல் திகைத்துப் போய் நின்றனர். அதன் பிறகு தான் இது ஒத்திகை நிகழ்ச்சி என்பதை உணர்ந்த பொதுமக்கள் அதனை வேடிக்கை பார்த்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்களும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி அருகே உள்ள நரிக்குளத்தில் நடந்தது.

Tags:    

Similar News