உள்ளூர் செய்திகள்

கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்தினருக்கு நிதி உதவிமாநில தி.மு.க. மீனவர் அணி செயலாளர் வழங்கினார்

Published On 2023-10-06 10:31 GMT   |   Update On 2023-10-06 10:31 GMT
  • கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி
  • மீனவர்கள் 16 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்

நாகர்கோவில் : கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி மாநில தி.மு.க. மீனவர் அணி செயலாளர் வழங்கினார்  குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 28-ந்தேதி இரவு இவர்களது விசைப்படகு மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் கவிழ்ந்தது. இதில் 13 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீனவர்கள் ஆன்றோ (47), ஆரோக்கியம் (52), கொட்டில்பாடு பயஸ் (63) ஆகியோர் மாயமாகினர்.

இதில் பயஸ் உடல் 30-ந்தேதி மீட்கப்பட்டது. ஆன்றோ, ஆரோக்கியம் குறித்து தகவல் கிடைக்கவில்லை. இவர்களை உறவினர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின் மாயமான மீனவர்கள் ஆன்றோ, ஆரோக்கியம் மற்றும் பலியான பயஸ் ஆகியோர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

பின்னர் பயஸ், ஆரோக்கியம் ஆகியோரது குழந்தைகளின் மேற்படிப்புக்கான செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். இதில் தி.மு.க. மாவட்ட மீனவர் அணி தலைவர் ஆன்றனி ராஜ் (எஸ்.கே.), செயலாளர் அனனியாஸ், துணை செயலாளர் ரூபன், குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்க தலைவர் வற்கீஸ், செயலாளர் பிராங்கிளின், துணை செயலாளர் ஆன்றனி, பொருளாளர் அந்திரியாஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், பனிக்குருசு, முன்னாள் கவுன்சிலர் சிபு மற்றும் விஜயன், மிரா ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News