உள்ளூர் செய்திகள்

மீன்வளக் கல்லூரியில் மீனவ மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அரசு தான்

Published On 2023-11-22 07:27 GMT   |   Update On 2023-11-22 07:27 GMT
  • கனிமொழி எம்.பி. பேச்சு
  • தி.மு.க. அரசில் கருணாநிதி மீனவர் நலத்து றையை உருவாக்கினார்

நாகர்கோவில், நவ.22-

குமரி மாவட்டத்தில் கடற் கரை கிராமங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சி பணிகளை தி.மு.க. அரசு செய்ததாக இனயம் புத்தன்துறையில் நடந்த மீனவர் தின விழாவில் கனிமொழி எம்.பி., பேசினார்.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறையில் மீனவர் தினவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். விழாவில், சிறப்பு விருந்தினராக கனிமொழிஎம்.பி., கலந்து கொண்டு பேசியதாவது:-

கடலில் மட்டுமல்ல போராட்டம், வாழ்க்கை நடத்தும் கடற்கரையிலும் இயற்கையினால் ஏற்படும் போராட்டங்களை விவரித்தனர். இதை அறிந்து தான் தி.மு.க. அரசில் கருணாநிதி மீனவர் நலத்து றையை உருவாக்கினார். இங்கு பேசும் போது தமிழக சட்டமன்றத்தில் மீனவர்க ளுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றனர். கருணாநிதி அரசில் முதல் மீன்வளத்துறை அமைச்சர் சென்னை மீனவர் கே.பி.பி.சாமி தற்போது அவரது சகோதரர் கே.பி.பி. சங்கர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். மீன்வளத்துறை மட்டுமின்றி தமிழகத்தின் மிக முக்கிய துறையான சுகாதார துறையின் தற்போதைய அமைச்சர் ஒரு மீனவர் என்பதை கூறிக் கொள்கிறேன். இங்கு முக்கிய பிரச்சனையாக மீனவர்களை பழங்குடியி னர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்து உள்ளனர். வரும் நாடாளு மன்ற தேர்தலில் மத்தியில் ஒரு மாற்றம் வரும். மாற்றம் வந்தால் மீனவர் கோரிக்கை கள் நிறைவேற்றப்படும். மீனவர்களுக்கு என ராமநாதபுரத்தில் தனி மாநாடு நடத்தியவர் ஸ்டாலின், மீன்வள கல்லூ ரிகளில் மீனவ மாண வர்களுக்கு 20 சதவீத இடம் ஒதுக்கியதும் தி.மு.க., அரசு தான். குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்தது தி.மு.க., அரசு. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத் தில், அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய்வசந்த் எம்.பி., மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவா ஹிருல்லா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்கு மார், பிரின்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News