உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் ரோட்டில் வரி செலுத்தாதவர் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-02-16 07:58 GMT   |   Update On 2023-02-16 07:58 GMT
  • சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்வதில் மாநகராட்சி தீவிரம்
  • ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையும் அக்டோபர் முதல் மார்ச் வரையும் என இருமுறை பிரிக்கப் பட்டுள்ளது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநக ராட்சி வரி வசூல் செய்வதில் தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதனால் பல்வேறு நலத்திட்டங்கள் மாநக ராட்சிக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல திட்டங்களை கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்வதில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல மையங்கள் திறக்கப்பட்டு விடுமுறை நாட்களிலும் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன் உத்தர விட்டுள்ளார். நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் ரோடு கோணம் பகுதியில் ராதா கிருஷ்ணன் என்பவர் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாமல் உள்ளார். அதனை தொடர்ந்து ஆணையரின் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, ஆல்டிரின், சேகர், பிட்டர் ஜஸ்டின், தேவகுமார் மற்றும் உதவி வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள், ராதா கிருஷ்ணன் வீட்டிற்கு செல் லும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

மாநகராட்சிக்கு ஆண்டிற்கு இரு முறை வரி செலுத்தும் வகையில் மாதங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையும் அக்டோ பர் முதல் மார்ச் வரையும் என இருமுறை பிரிக்கப் பட்டுள்ளது.

இதில் முதல் அரை யாண்டில் ஏப்ரல் 30-ந் தேதிக்குள்ளும் 2-வது அரையாண்டில் அக்டோபர் 30-ந்தேதிக்குள்ளும் கண்டிப்பாக வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும். செலுத்தாதவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தர விட்டுள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்த னர்.

Tags:    

Similar News