உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் துணை நடிகைகள், நடிகர்கள் புகார் சம்பளம் தரவில்லை என மனு

Published On 2023-03-20 12:51 IST   |   Update On 2023-03-20 12:51:00 IST
  • பிரபல டைரக்டர் டைரக்ட் செய்து வரும் சினிமா படத்தின் வெளிப்புறபடபிடிப்பு நடந்து வருகிறது.
  • பொறுப்பாளரிடம் வழங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிரபல டைரக்டர் டைரக்ட் செய்து வரும் சினிமா படத்தின் வெளிப்புறபடபிடிப்பு நடந்து வருகிறது.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள பகுதியிலும் கடற்கரை சாலை பகுதியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இந்த நிலையில் இந்த சினிமா படத்தில் நடித்த துணை நடிகைகள் தங்களுக்கு சம்பளம்தரவில்லை என்று கூறி இன்று காலை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் 2 துணை நடிகர்களும் வந்தனர்.

இது பற்றி அந்த 2 துணை நடிகைகளிடமும் 2 துணை நடிகர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த படத்தின் டைரக்டர் நடிகைகளுக்குரிய சம்பளத்தை ஏற்கனவே அந்த படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த பொறுப்பாளரிடம் வழங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த படப்பிடிப்பு குழுவை சேர்ந்த பொறுப்பாளர்களை போலீசார் விசாரணை க்கு வரும்படி அழைத்து உள்ளனர்.

Tags:    

Similar News