உள்ளூர் செய்திகள்
ஆரல்வாய்மொழியில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
- ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
- மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது
ஆரல்வாய்மொழி :
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்தையொட்டி பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.