உள்ளூர் செய்திகள்

அதிரடி படையினருடன் இணைந்து போலீஸ் சூப்பிரண்டு தூய்மை பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்

நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தூய்மை பணி

Published On 2022-11-12 13:15 IST   |   Update On 2022-11-12 13:15:00 IST
  • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எடுத்துச் சென்றனர்.
  • அதிரடி படையினருடன் இணைந்து போலீஸ் சூப்பிரண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஆய்வின் போது போலீஸ் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்தநிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தூய்மை பணி நடந்தது.அதிரடி படை யினருடன் இணைந்து வளா கத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை போலீ சாருடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் அகற்றி னார். பின்னர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த குப்பைகளை எடுத்துச் சென்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் ஆங்காங்கே பூந்தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

Tags:    

Similar News