உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி

Published On 2023-11-09 07:05 GMT   |   Update On 2023-11-09 07:05 GMT
  • இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என 35 பேர் கலந்து கொண்டனர்.
  • அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்களையும் வழங்கினார்.

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கான சதுரங்க போட்டி நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. போட்டியில் கண் பார்வை யற்றோர், செவித்திறனற்றோர், உடல் ஊனமுற்றோர் என 3 பிரிவுகளாக ேபாட்டி கள் நடத்தப்பட்டது. வயது வரம்பின்றி நடந்த இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என 35 பேர் கலந்து கொண்டனர்.

மாவட்ட சதுரங்க கழக செயலாளர் வின்ஸ்டன் நடுவராக செயல்பட்டார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கார்மல் மேல்நிலைப்பள்ளி அருட்தந்தை வின்சென்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்களையும் வழங்கினார்.

விழாவில் சதுரங்க கழக நிர்வாகிகள் நடராஜன், துணை தலைவர்கள் தட்சனா மூர்த்தி, எப்ரேம் ரெக்ஸ், துணை செயலா ளர்கள் அரவிந்த், வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News