உள்ளூர் செய்திகள்

 5 வயது மாணவர் லெயான்ஷ் பிராசாத் விருது பெறும்போது எடுத்த படம் 

இரணியல் அருகே உலக சாதனையாளரான 5 வயது மாணவனுக்கு விருது

Published On 2022-10-16 08:20 GMT   |   Update On 2022-10-16 08:20 GMT
  • உலக சாதனை புரியும் போது அவரது வயது 4 வருடம் 11 மாதம் ஆகும்.
  • தனது கண்களை கட்டி ஒரு நிமிடத்தில் 165 கார் லோகோ பெயர்களை சொல்லி உலக சாதனை புரிந்துள்ளார்.

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுப்ரமணிய பிரசாத் துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஒலினா. இவர்களது மகன் லெயான்ஷ் பிராசாத்(வயது5). தற்பொழுது துபாயில் யூ.கே.ஜி. பயின்று வருகிறார். இவர் தனது கண்களை கட்டி ஒரு நிமிடத்தில் 165 கார் லோகோ பெயர்களை சொல்லி உலக சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் உலக சாதனையாளர் புத்தகம் மற்றும் கலாம் சாதனையாளர் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். உலக சாதனை புரியும் போது அவரது வயது 4 வருடம் 11 மாதம் ஆகும்.

இதற்கான விருதுகளை இரணியல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியனிடமிருந்தும் தனித்துவம் வாய்ந்த சாதனையாளர் விருதினை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜூலியட்டிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்.

இவர் மேலும் பல உலக சாதனைகள் புரிந்து பல புத்தகங்களில் இடம் பெற முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார். இவரது தந்தை ஏற்கனவே தனது இரு கைகளையும் எதிரெதிர் திசையில் ஒருநிமிடத்தில் அதிக அளவில் சுற்றி உலக சாதனை புரிந்து உலக சாதனையாளர் புத்தகம், ஆசிய சாதனையாளர் புத்தகம், இந்திய சாதனையாளர் புத்தகம் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News