உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா

Published On 2022-09-10 07:15 GMT   |   Update On 2022-09-10 07:15 GMT
  • 12-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
  • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜை, 6.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது. 13-ந்தேதி (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு பஜனை, 10 மணிக்கு சிங்காரி மேளம், 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, 12 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 12.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது.

14-ந்தேதி மூன்றாம் நாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாரா தனையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News