உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-09-13 07:07 GMT   |   Update On 2022-09-13 07:07 GMT
  • ஆவணித் திருவிழா நேற்று (12ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
  • மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்குதல்

கன்னியாகுமரி :

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று (12ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

முதல் நாளான நேற்று 12 ந் தேதி சுமங்கலி பூஜை, இன்று அஸ்வதி பொங்காலை, நாளை திருவிளக்கு பூஜை மற்றும் பரிசளிப்பு விழா என மூன்று நாளும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதையொட்டி நேற்று காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு பஜனை, 10.30 மணிக்கு சத்சங்கம், மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலையில் சுமங்கலி பூஜை நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜையும் நடந்தது. 2-ம் நாளான (இன்று) 13-ந் தேதி காலை 9 மணிக்கு மங்கள வாத்தியம், 10 மணிக்கு பஜனை தொடர்ந்து 5001 பொங்கல் வழிபாடு நடந்தது.

பின்னர் பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடந்தது. மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது.மூன்றாம் நாள் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News