உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்
- 4 வயது குழந்தை-தாய் காயம்
- புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது 32). இவர் கணவர் அல்டோ ராபின் மற்றும் மகன் ரஷினா (4) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கடைக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பும்போது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த அந்தோணியம்மாள், அவரது மகள் ரஷினா படுகாயம் அடைந்தனர். ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது. காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கதினர் மீட்டு மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.