உள்ளூர் செய்திகள்

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மாற்று மத வழிபாட்டுத்தலங்கள் அமைக்கக்கூடாது

Published On 2022-06-16 08:12 GMT   |   Update On 2022-06-16 08:12 GMT
  • இந்து மகாசபா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
  • புதிதாக எந்தவிதமான கிறிஸ்தவ ஜெபக் கூடமோ, பிற வழிபாட்டுத்தலங்களோ அமைக்கக் கூடாது

நாகர்கோவில் :

அகில பாரத இந்து மகாசபா மாநிலத்தலைவர் த.பாலசுப்பிரமணியன் தலைமையில் மாநகர தலைவர் ராஜேஷ் மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் நேற்று நாகர்கோவியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகாகோவில் ஆசாரிபள்ளம் பழமையான காசநோய் மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு இடம் கையகப்படுத்தும்போது அந்த இடத்தில் இருந்த இந்து ஆலயங்களையும் அரசே தினமும் பூஜையோடு பராமரித்து வருகிறது. இந்த இடம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது. இது இந்து ஆலயங்களுக்கு சொந்தமான இடமானதால் அரசே இந்த ஆலயத்தை பராமரித்து வருகிறது. சமீபத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக மாறிய பிறகும் ஆலய பூஜைகள் தினசரி நடைபெற்று வருகிறது.

எனவே அங்கு புதிதாக எந்தவிதமான கிறிஸ்தவ ஜெபக் கூடமோ, பிற வழிபாட்டுத்தலங்களோ அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். மருத்துவமனையில் ஏற்கனவே என்ன நடைபெற்று வருகிறதோ, அது தொடர வேண்டும். வேறு எந்த நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News