உள்ளூர் செய்திகள்

அரசு தொடக்கப்பள்ளிகளில் புதிதாக 8 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்

Published On 2022-12-29 07:09 GMT   |   Update On 2022-12-29 07:09 GMT
  • மாணவர்களின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர பெற்றோர் ஆசிரியர் கழகம், பொது மக்கள் போன்றோர் கோரிக்கை வைத்ததனர்.
  • அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.68.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடம் ஆக மொத்தம் 8 வகுப்பறை கட்டிடங்கள் இந்த நிதியில் கட்டப்பட உள்ளன

நாகர்கோவில் :

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல்வாய்மொழி தாணுமாலையன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், குமாரபுரம் தோப்பூர் அரசு தொடக்கப் பள்ளி, ஒற்றையால்விளை அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் மாணவர்களின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர பெற்றோர் ஆசிரியர் கழகம், பொது மக்கள் போன்றோர் கோரிக்கை வைத்ததனர்.

இதன் அடிப்படையில் இப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி தர நிதி ஒதுக்கீடு செய்திட அரசிடம் பரிந்து ரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஊராட்சிப் பள்ளிகளில் புதிய வகுறை கட்டிடம் கட்டுவதற்கு அரசு ரூ.1 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தர விடப்பட்டுள்ளது.

ஆரல்வாய் மொழி தாணுமாலை யன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடம், குமாரபுரம் தோப்பூர் அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடம், ஒற்றையால்விளை அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.68.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடம் ஆக மொத்தம் 8 வகுப்பறை கட்டிடங்கள் இந்த நிதியில் கட்டப்பட உள்ளன. பணிகள் விரை வில் தொடங்கப்பட உள் ளது. இதற்காக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News