உள்ளூர் செய்திகள்

தடம் மாறி இயங்கும் பஸ்களை சரியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-10-03 09:25 GMT   |   Update On 2022-10-03 09:25 GMT
  • கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
  • நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இன்று கலெக்டர் அரவிந்த் பொதுமக்களை சந்தித்து மனுக்களை வாங்கினார். கலெக்டர் அலுவல கத்திற்கு மனு அளிக்க வந்த பொது மக்கள் பலத்த சோத னைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தக்கலை ஒன்றிய பா.ஜனதா தலைவர் ஸ்ரீ பத்மநாபன் தலைமையில் ஏராளமானோர் வந்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

திங்கள்நகர்-தக்கலை செல்லும் குறிப்பிட்ட சில மினிபஸ்கள் அரசு அனுமதி பெற்ற கிராமப்புற வழித்தடங்களான பதியூர், பள்ளந்தட்டுவிளை, நெல்லியாரகோணம் வழி யாக இயங்காமல் ஆலங்காடு சந்திப்பு, மைலோடு, வட்டம் சந்திப்பு வழியாக இயக்கப்படுகின்றன.

இதனால் பதியூர், பள்ளந்தட்டுவிளை, நெல்லியார கோணம் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாணவர்களின் கல்வி மற்றும் பொதுமக்க ளின் நலன் கருதி பதியூர், பள்ளந்தட்டுவிளை, நெல்லியாரகோணம் வழியாக மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News