உள்ளூர் செய்திகள்

மயங்கி விழுந்து இறந்த செல்வதாஸ்

இரணியல் அருகே பிரார்த்தனைக்கு வந்தவர் மயங்கி விழுந்து சாவு

Published On 2022-11-20 13:40 IST   |   Update On 2022-11-20 13:40:00 IST
  • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
  • நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் இழந்தார்

கன்னியாகுமரி:

இரணியல் அருகே கண்டன்விளையில் உள்ள ஒரு ஆலயத்தில் பிரார்த்த னைக்காக பலரும் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார்.

அவர் தீடிரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இதற்கிடையில் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த செல்வதாஸ் (வயது 50) என்பதும் நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் இழந்தார் என்பதும் தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News