உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டத்தில் அதிக பாரம் ஏற்றி சென்ற 7 கனரக லாரிகள் பறிமுதல்

Published On 2022-11-03 07:04 GMT   |   Update On 2022-11-03 07:04 GMT
  • லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
  • கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேளைகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட 7 கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News