உள்ளூர் செய்திகள்

இடைக்கோடு பேரூராட்சியில் கவுன்சிலர்கள் 2-வது நாளாக முற்றுகை போராட்டம்

Published On 2023-05-27 12:50 IST   |   Update On 2023-05-27 12:50:00 IST
  • இரவில் பாய் விரித்து அலுவலகத்தில் உறங்கியதால் பரபரப்பு
  • பேரூராட்சி அலுவலகத்திற்கு வர்ணம் பூச ரூ.9 லட்சமும், கழிவறை அமைக்க ரூ. 7½ லட்சம் மதிப்பீடு

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் இடைக்கோடு பேரூராட்சி உள்ளது. 18 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியின் தலைவியாக பா.ஜனதாவை சேர்ந்த உமாதேவி உள்ளார்.

நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தற்போது இருக்கும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வர்ணம் பூச ரூ.9 லட்சமும், கழிவறை அமைக்க ரூ. 7½ லட்சம் மதிப் பீடு செய்து கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதில் முறைகேடு உள்ளதாக தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டு கொள்ளாமல் பேரூராட்சி தலைவி மற்றும் செயல் அலுவலர் கூட்டத்தில் இருந்து கிளம்பி சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள், பேரூராட்சி தலைவி மற்றும் நிர்வாகத்தை கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டம் இரவிலும் நீடித்தது.

3 பெண் கவுன்சிலர்கள் உள்பட 8 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தினுள் தலையணை, பாய் விரித்து தூங்கியபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 2-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News