உள்ளூர் செய்திகள்

பாலமோரில் 27.2 மி.மீ. மழை

Published On 2022-08-09 07:04 GMT   |   Update On 2022-08-09 07:04 GMT
  • பெருஞ்சாணி அணை 70 அடியை எட்டியது
  • திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

நாகர்கோவில்: 

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. இரவு நேரத்தில் குளிர் காற்று வீசுவதால் இதமான சூழல் நிலவுகிறது.

நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கன்னிமார், கொட்டாரம், நாகர்கோவில், பூதப்பாண்டி, தக்கலை, ஆரல்வாய்மொழி ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. நீர் பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. பாலமோரில் அதிகபட்சமாக 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணி கள் வந்திருந்தனர். அவர் கள் அருவி யில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்த னர். பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் அதிக அளவு வந்து கொண்டி ருக்கிறது.

ஆனால் அணைகளின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண் காணித்து வருகிறார் கள். ஏற்கனவே பேச்சிப் பாறை, சிற்றார் அணை களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து குழித்துறை கோதையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டு உள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வரு கிறார்கள்.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.88 அடியாக இருந்தது. அணைக்கு 951 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 261 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 70 அடியை எட்டியது. அணைக்கு 1247 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 535 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.70 அடியாக உள்ளது.

Tags:    

Similar News