உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் 27¼ லட்சம் பக்தர்கள் தரிசனம்

Published On 2023-09-26 07:09 GMT   |   Update On 2023-09-26 07:09 GMT
  • 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
  • புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அன்று ஒரு நாளில் மட்டும் 5 ஆயிரத்து 341 பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி விவேகா னந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருடாழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.

இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இது வரை 27 லட்சத்து 30 ஆயிரத்து 302 பக்தர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். இந்த திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திறக்கப்பட்ட 2019-2020-ம் ஆண்டில் 9 லட்சத்து 78 ஆயிரத்து 465 பேரும், 2020-2021-ம் ஆண்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 805 பேரும், 2021-2022-ம் ஆண்டில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 352 பேரும், 2022-2023-ம் ஆண்டில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 548 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 77 ஆயிரத்து 684 பேரும், மே மாதம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 865 பேரும், ஜூன் மாதம் 64 ஆயிரத்து 381 பேரும், ஜூலை மாதம் 62 ஆயிரத்து 240 பேரும், ஆகஸ்ட் மாதம் 61 ஆயிரத்து 666 பேரும், இந்த செப்டம்பர் மாதம் நேற்று வரை 45 ஆயிரத்து 15 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அன்று ஒரு நாளில் மட்டும் 5 ஆயிரத்து 341 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ் தான வெங்கடாஜலபதி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News