உள்ளூர் செய்திகள்

கொல்லங்கோடு அருகே செம்மண் கடத்திய 2 டெம்போக்கள் பறிமுதல்

Published On 2023-08-21 06:51 GMT   |   Update On 2023-08-21 06:51 GMT
  • தப்பி ஓடிய டிரைவர்களுக்கு வலைவீச்சு
  • டெம்போக்களின் 2 டிரைவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வருவாய்த் துறையினரும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற னர். செம்மண் கடத்தலை தடுக்க போலீ சார் வாகன சோதனை யிலும் ஈடுபட்டு வருகின்ற னர். இருப்பினும் கடத்தல் சம்பவம் தொடர்ந்தே வருகிறது. போலீசார் மற்றும் வருவாய் துறையினரை பார்த்ததும் லாரிகளை நிறுத்திவிட்டு அதன் டிரைவர்கள் தப்பிச்செல்வது வாடிக்கை யாக நடந்து வருகிறது.

நேற்று கொல்லங்கோடு அருகே உள்ள சந்தனபுறம் பகுதியில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 டெம்போக்கள் வந்தன. அதில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாக னங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

உடனடியாக போலீசார் 2 டெம்போக்களையும் சோதனை செய்தபோது அவற்றில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் 2 டெம்போக்களைணயும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து செம்மண் கடத்தி வந்த டெம்போக்களின் 2 டிரைவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News