கோப்பு படம்
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
- இந்த ஆண்டு இதுவரை 72 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
- 72-வது ஆளாக குளச்சலில் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தொடர்ந்து குற்ற செயல் களில் ஈடுபடுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 71 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் பெரும்பாலானோர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார். திருவட்டாறு செருகோல் பகுதியைச் சேர்ந்தவர் வினு (வயது 22). இவரை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா கைது செய்தார்.கைது செய்யப்பட்ட இவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து வினுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து வினு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை ஜெயிலில் அடைக்கப்பட் டார். இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.