உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

தக்கலை சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-02-11 07:53 GMT   |   Update On 2023-02-11 07:53 GMT
  • 150 கிராம அலுவலர்கள் பங்கேற்பு
  • அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம்

கன்னியாகுமரி:

கிள்ளியூர் வட்டம் கீழ்மிடாலம் பி கிராம நிர்வாக அலுவ லராக ராஜேஷ் என்பவர் பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவர், திடீரென பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் நாகேஸ்வரன், பொருளாளர் ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் திருவட்டார், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய வட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், 40 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று 11-ந்தேதி அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடு கின்றனர்.

Tags:    

Similar News