உள்ளூர் செய்திகள்

பூங்காவில் உள்ள அலங்கார செடிகளின் தொட்டிகளை தாறுமாறாக ஓட்டி சென்ற சுற்றுலா வாகனங்கள் சேதப்படுத்தி இருப்பதை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரியில் கடற்கரை பூங்காவை சேதப்படுத்திய சுற்றுலா வாகனங்கள்

Published On 2023-01-18 13:06 IST   |   Update On 2023-01-18 13:06:00 IST
  • “பார்க்கிங்” வசதி இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல்
  • பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு பூங்கா அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு பூங்கா அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சீசன் முடிவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 5நாட்களாக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பஸ், கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களில் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாகஇருந்தனர்.

இங்கு சீசன் காலங்களில் வரும் சுற்றுலா வாக னங்களை நிறுத்துவதற்கு கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதி யில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் நாள்தோறும் வழக்கத்துக்கு அதிகமாக சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்கு வருவதால் அந்த வாகனங்க ளை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் கடற்கரை சாலையிலும் மற்ற வீதிகளிலும் சுற்றுலா வாகனங்களை தாறுமாறாக கொண்டு நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள்.

இதனால் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதில் சுற்றுலா வாகனம் ஒன்றை டிரைவர் தாறுமாறாக ஓட்டியதால் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள பூங்காவி ல் அமைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட சாலையோர பூந்தொட்டிகள் மற்றும் சாலையோரமாக நடப்பட்டு இருந்த நிழல்தரும் அலங்கார மரங்களை பாதுகாக்க சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு சுவரையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.எனவேகன்னியா குமரிக்கு வரும்சுற்றுலா வாகனங்களைநிறுத்து வதற்கு கூடுதலாக "பார்க்கிங்" வசதி ஏற்படுத்த வேண்டும் என்றுசுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News