உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 

மண்டைக்காடு கோவிலுக்கு சிறப்பு பஸ்கள்

Published On 2023-02-22 11:19 GMT   |   Update On 2023-02-22 11:19 GMT
  • போக்குவரத்து கழக அதிகாரி தகவல்
  • மாசி கொடை விழா வருகிற 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா வருகிற 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான வலிய படுக்கை பூஜை 10-ந்தேதியும், பெரிய சக்கர தீவட்டி பவனி 13-ந் தேதியும், 14-ந் தேதி ஒடுக்கு பூஜையும் நடக்கிறது.

இந்த விழாக்களில் பங்கேற்க குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களின் நலன் கருதி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி ஒரு ஊரில் இருந்து 50 பயணிகள் பயணம் செய்தால் அவர்களுக்கு அந்த ஊரிலிருந்தே சிறப்பு பஸ் மண்டைகாட்டிற்கு இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

அந்த வகையில் மண்டைக்காடு கோவி லுக்கு செல்பவர்கள் போக்கு வரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) 9487599082, ராணிதோட்டம்-2 கிளை மேலாளர் 9487599085, ராணிதோட்டம்-3 கிளை மேலாளர் 9487599086, வடசேரி பஸ் நிலையம் 8300185777 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News