உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்த ரேசன் அரிசி மற்றும் வேனுடன் அதிகாரிகள் இருப்பதை படத்தில் காணலாம்.

தக்கலை அருகே மீன் பெட்டியில் மறைத்து 500 கிலோ ரேசன் அரிசி கடத்தல்

Published On 2023-01-31 12:14 IST   |   Update On 2023-01-31 12:14:00 IST
  • வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்
  • தக்கலை வட்டவழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனை

கன்னியாகுமரி:

தக்கலை வட்டவழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பரைகோடு வழியாக ஒரு சொகுசு வேன் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வேனை தடுத்து நிறுத்திய போது நிற்காமல் வேக மாக சென்றது. உடனே அதிகாரிகள் பின் தொடர்ந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று சுவாமி யார்மடம் பகுதியில் மடக்கி பிடித்தனர். உடனே வேன் டிரைவர் சம்பவ இடத்தில் வாகனத்தினை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.

பின்னர் வாகனத்தினை சோதனை செய்த போது அதில் மீன் வைக்கும் பெட்டிகளை அடுக்கி அதன் அடிப்பகுதியில் நூதன முறையில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி கடத்துவதற்கு ஏதுவாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வாகனத்துடன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

பறிமுதல் செய்த வேனை தக்கலை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News