உள்ளூர் செய்திகள்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களுடன் ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்.

குமரி மாவட்டத்தை கஞ்சா மற்றும் போதை பொருள் இல்லாத மாவட்டம் ஆக்க வேண்டும்

Published On 2023-01-24 09:53 GMT   |   Update On 2023-01-24 09:53 GMT
  • ஏ.டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் அறிவுரை
  • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

நாகர்கோவில்:

தமிழ்நாடு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் போலீஸ் அதிகாரிகளு டன் ஆலோ சனை மேற்கொண் டார்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனையின்போது, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டம் கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்றப்பட வேண்டும். வெளி மாநிலங்க ளில் இருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கினார்.

அதோடு கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான இளை ஞர்கள், மாண வர்களை மீட்கும் வகையில் காவல்துறையினர் விழிப்பு ணர்வு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்றும் கூறினார். மேலும் மாவட்டத்தில் போதை மீட்பு சிகிச்சை மையங்களுடன் காவல்துறையினர் இணைந்து செயலாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்த வேண்டும். மேலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் போட்டோ பாயின்ட் ஏற்படுத்தும் நிகழ்ச்சியையும் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ பாயிண்ட், பல்வேறு முக்கிய இடங்களில் வைக்கவும், பள்ளி, கல்லூரிகளில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். மேலும் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் பறிமுதல் செய்த கஞ்சா வைக்கப்பட்டுள்ள குடோனையும் ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டார்.

Tags:    

Similar News