கோப்பு படம்
காதல் ஜோடியிடம் போலீஸ் நிலையத்தில் விசாரணை
- மார்த்தாண்டம் தொழிலாளியை இரும்பு கம்பியால் குத்திய உறவினர்
- தடுத்த சப்-இன்ஸ்பெக்டரும் படுகாயம்
நெல்லை:
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள கருப்புக் கட்டி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர் கோகுல் சந்திரசேகர்
(வயது 23).
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவானி (20) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்க ளது காதலுக்கு பவானியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கடந்த 3-ந் தேதி பவானி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் காதல் ஜோடி, நாகர்கோவில் சென்று அங்குள்ள கோவி லில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் பவானியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் காதல் ஜோடி யான பவானி-கோகுல் சந்திரசேகர் போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு அவர்களிடமும் பவானி குடும்பத்தினரிடமும் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார்.
அப்போது பவானியின் அண்ணன் முத்துப்பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து கோகுல் சந்திரசேகரின் கழுத்தில் குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையின் போது காதல் திருமணம் செய்த வாலிபர் குத்தப்பட்டதை கண்ட, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் மேலும் அசம் பாவித சம்பவம் ஏற்படாத வகையில் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரவிச்சந்திரன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கோகுல் சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு உள்ளார்.