உள்ளூர் செய்திகள்

கூண்டில் சிக்கியுள்ள குரங்குகளை படத்தில் காணலாம்.

பொதுமக்களுக்கு இடையூறு செய்த 32 குரங்குகளை பிடித்த வனத்துறையினர்

Published On 2022-12-16 07:59 GMT   |   Update On 2022-12-16 07:59 GMT
  • வேளிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.
  • நாகர்கோவில் புளியூர் குறிச்சி மற்றும் உதயகிரி கோட்டை பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

நாகர்கோவில்:

நாகர்கோவில் புளியூர் குறிச்சி மற்றும் உதயகிரி கோட்டை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு திரளான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் சென்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. அதனை தடுக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். குரங்குகளை பிடிக்க அப்பகுதியினர் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை ஏற்று வேளிமலை வனசரகத் திற்குட்பட்ட வடக்கு பீட் வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க முடிவு செய்து கூண்டு வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதில் நேற்று 32 குரங்குகள் சிக்கியுள்ளன. அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்து வேளிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.

Tags:    

Similar News