உள்ளூர் செய்திகள்

கனியாமூர் தனியார் பள்ளியில்: மாணவர்களின் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.கவுதமசிகாமணி எம்.பி. கலெக்டரிடம் மனு

Published On 2022-07-24 10:05 GMT   |   Update On 2022-07-24 10:05 GMT
  • கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவர்களின் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்.கவுதமசிகாமணி எம்.பி. கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
  • பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கவுதமசிகாமணி கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷர்வன்குமார் ஜடாவத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவில் கூறியுள்ளதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற விரும்பத்தகாத செயல் வேதனைக்குரியது. அந்தப் பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனால் சுமார் 4000 மாணவர்கள் படிப்புகேள்விக்குறியாகி உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் உடனடியாக கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும். உடனடியாக மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கல்வி வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News