உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் வல்லப கணபதி ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி, பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 

பரமத்தி வேலூர் பகுதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா 4-ம் நாள் வழிபாடு

Published On 2022-10-29 09:13 GMT   |   Update On 2022-10-29 09:13 GMT
  • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வல்லவ விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷே கம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

அதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News