உள்ளூர் செய்திகள்

காமராஜர் பிறந்த நாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு எர்ணாவூர் நாராயணன் நலத்திட்ட உதவி

Published On 2023-07-15 08:19 GMT   |   Update On 2023-07-15 08:19 GMT
  • மு.க.ஸ்டாலின் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  • பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து காமராஜர் சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை:

சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், சென்னையில் பொது மக்களுக்கு 50 - க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், உபகரண பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நங்கநல்லூர் நேரு ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராயபுரம் ஜி. ஏ. ரோட்டில் அமைந்து உள்ள காமராஜர் சிலை, திருவொற்றியூர் தேரடியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு திருவொற்றியூர் நாடார் உறவின்முறை சார்பில் பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து காமராஜர் சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

தி நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் உள்ள சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுபாஷ் சுரேஷ்பாபு ஏற்பாட்டில் 121 கிலோ எடை கொண்ட மெகா லட்டு பெருந்தலைவர் இல்லத்தில் படைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பழனி முருகன், மாவட்ட பொருளாளர் மனோகரன் ஏற்பாட்டில் கார்த்திக் நாராயணன் அன்னதானம் வழங்கினார். எழில் நகர் நாடார் பேரவை சார்பில் காமராஜர் படத்திற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து அறுசுவை உணவு அன்னதானம் வழங்கினார்.

Tags:    

Similar News