உள்ளூர் செய்திகள்

கல்வராயன்மலை கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் முழுக் கொள்ளளவை எட்டியது: 800 கன அடி நீர் வெளியேற்றம்

Published On 2023-11-08 08:46 GMT   |   Update On 2023-11-08 08:46 GMT
  • இந்த அணையில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
  • மேலும், நீர் வரத்து படிப்படியாக குறைந்ததால், நீர் திறந்து விடப்படுவதும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. 46 அடி உயரமுள்ள இந்த அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். உபரி நீரினை விவசாயத்திற்கு திறக்கப்படும். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த அணையில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் நேற்று மாலை கோமுகி அணைக்கு 3 ஆயிரம் கன அடிநீர் வந்தது. இதையடுத்து நேற்று இரவு கோமுகி அணையில் இருந்து 2500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும், நீர் வரத்து படிப்படியாக குறைந்ததால், நீர் திறந்து விடப்படுவதும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இன்று காலை 10 மணி நிலவரப்படி கோமுகி அணைக்கு 800 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழுக்கொள்ளளவான 44 அடிக்கு நீர் உள்ளதால், உபரியாக வரும் 800 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்படுகிறது. இதனால் கோமுகி அணையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News