உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி: முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

Published On 2022-06-17 09:16 GMT   |   Update On 2022-06-17 09:16 GMT
  • கள்ளக்குறிச்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க்கப்பட்டது,
  • மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார்.

இதில் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்து வருவேன், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன், முதியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பேன், மேலும் பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறையில் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

அப்போது சமூக பாதுகாப்பு நல அலுவலர் தீபிகா மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அஜிதா பேகம் நடராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News