விழாவில் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஓசூரில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி
- கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
- ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, மூக்கண்டப்பள்ளியில் உள்ள தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. வின் துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி (சகோதரர் மகள்) இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு மண மக்கள் நித்யதாரணி-தீபக் ஆகியோரை வாழ்த்தினார்கள்.
இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்களான வீரமணி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், செங்கோட்டையன், கிருஷ்ணகிரி மேக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஓ.எஸ். மணியன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார், தமிழ்ச்செல்வம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், தேவராசன், சக்கரவர்த்தி, கன்னியப்பன் ,சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், ராமமூர்த்தி, பாலசுப்பிரமணி, பாபு (எ) வெங்கடாசலம், பையூர் ரவி, முருகன் , நகர செயலாளர்கள் கேசவன், விமல், ஆறுமுகம், உள்ளிட்டோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.