மாவட்ட வருவாய் அலுவலர் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று, ஜமாபந்தியை தொடங்கி வைத்த காட்சி.
- மாவட்ட வருவாய் அலுவலர் மனுக்களை பெற்று, ஜமாபந்தியை தொடங்கி வைத்தார்.
- பொது மக்களிடமிருந்து 134 மனுக்கள் பெறப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுக்காகளில் , பசலி 1432 ஆம் ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது.
ஓசூரில், தாலுக்கா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று, ஜமாபந்தியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின்போது, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி பொது மக்களிடமிருந்து 134 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி அறிவுறுத்தினார். ஜமாபந்தி வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.