உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டு நடந்த போது எடுத்த படம்.

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு

Published On 2023-01-18 12:28 IST   |   Update On 2023-01-18 12:28:00 IST
  • போலீஸ் நிலையம் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
  • இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அங்கு கொண்டுவரப்பட்டது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி செந்தாரப்பட்டி போலீஸ் நிலையம் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அங்கு கொண்டுவரப்பட்டது. போட்டியில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களில் பிடியில் சிக்காமல் எகிறி குதித்து ஓடியது. போட்டியில் 26 பேர் காயமடைந்து தம்மம்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் . இதில் 4 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்லூரி மாணவர் சந்துரு உள்பட 2 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் எந்தவித அனுமதியும் அனுமதி வழங்காத நிலையில் அனுமதியை மீறி அந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.

செந்தாரப்பட்டி

இதேபோல் செந்தாரப்பட்டி பகுதியில் அரசு தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் காயம் அடைந்த 28 பேர் செந்தாரப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தடையை மீறி இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அனுமதியுடன் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News