உள்ளூர் செய்திகள்

சேலத்தில் 101.9 டிகிரி வெயில் கொளுத்துகிறது

Published On 2023-04-12 15:15 IST   |   Update On 2023-04-12 15:15:00 IST
  • சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது.
  • சேலத்தில், நேற்று முன்தினம் 100.1 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 101.9 டிகிரியாக உயர்ந்துள்ளது.

சேலம்:

கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில்

கொளுத்தி வருகிறது. சேலத்தில், நேற்று முன்தினம் 100.1 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 101.9 டிகிரியாக உயர்ந்துள்ளது.

இந்த வாரம் முழுவதும் வெயில் அளவு 3 டிகிரி அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதிய நேரத்தில் வெப்ப சலனத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனங்களில் செல்லும் இளம் பெண்கள்முகத்தை துப்பட்டா, சேலையால் மூடிக் கொண்டும் கைகளில் 'கிளவுஸ்' மாட்டிக்கொண்டும் பயணிக்கின்றனர்.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்பநிலை காரண மாக பகல் நேரங்களில் கடைவீதிகளில் மக்கள் கூட்ட மும் குறைவாகவே காணப் படுகிறது. உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், உடலில் இருந்து அதிகளவில் வியர்வை வெளியேறி சீக்கி ரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது.

இதனால் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்பு கின்றனர். கொளுத்தும் வெயிலால் சேலம் மண்டலத்தில் நுங்கு, இளநீர், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு விற்பனையும் அதிகரித்துள்ளன. இரவு நேரங்களில் வீடுகளில் வெப்பம் சலனம் இருப்பதால் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ஏப்ரல் 2-வது வாரத்தில் இயல்பை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும். அக்னி நட்சத்திர காலகட்டத்தில் சேலம் மண்டலத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றனர். இதேபோல நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று 100.6 டிகிரியாக வெயில் பதிவானது.

Tags:    

Similar News