உள்ளூர் செய்திகள்

 வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய, பழைய ஆயக்கட்டு பகுதிகளின் பாசனத்திற்காக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தார்.

வாணியாறு நீர்த்தேக்க தண்ணீர் மூலம் 17 கிராமங்களுக்கு பாசன வசதி

Published On 2023-02-17 09:57 GMT   |   Update On 2023-02-17 09:57 GMT
  • ஆயக்கட்டு பகுதிகளின் நேரடி பாசனத்திற்கும் இன்று முதல் 55 நாட்களுக்கு பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது.
  • மெணசி, பூதநத்தம் மற்றும் ஜம்மனஹள்ளி ஆகிய 17 கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கும் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளின் நேரடி பாசனத்திற்கும் இன்று முதல் 55 நாட்களுக்கு பாசனத்திற்காக பொது ப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) உதவி செயற் பொறியாளர் ஆறுமுகம் தண்ணீர் நேற்று திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2022-2023 ஆம் ஆண்டு (பசலி 1432) பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 8550.00 ஏக்கள் நிலங்களும்,

பழைய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 1967.00 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பை கொண்டு புதிய ஆயக்கட்டு பகுதியான வலதுபுற மற்றும் இடதுபுற கால்வாயிகளில் இன்று முதல் நான்கு நனைப்புகளுக்கு தண்ணீர் விடவும் முதல் நனைப்பிற்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களும்,

2 வது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் தண்ணீர் விட்டு 5 நாட்கள் நிறுத்தியும், 2 வது நனைப்புக்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களும், 2 வது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் தண்ணீர் விட்டு 5 நாட்கள் நிறுத்தியும், 3 வது நனைப்புக்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களும், 2 வது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் தண்ணீர் விட்டு 5 நாட்கள் நிறுத்தியும், 4வது நனைப்புக்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் 2 வது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் மொத்தம் 55 நாட்களுக்குப் பிறகு மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

இதனால் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், அலமேலுபுரம், தென்கரைக்கோட்டை, பறைய ப்பட்டி, மோளை யானூர், கோழிமேக்கனூர், பாப்பிரெ ட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, தேவராஜபாளையம், மெணசி, பூதநத்தம் மற்றும் ஜம்மனஹள்ளி ஆகிய 17 கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது.

மேலும், விவசாய மக்கள் பொதுப் பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரினை சிக்கமான பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் கிருபா, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி, பாசன சங்க பிரதிநிதிகள் குமரன், மரு.பழனிசாமி, தங்கராஜ், மணிக்கம், நாடேசகவுண்டர், அப்துல், சாகர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News