உள்ளூர் செய்திகள்

தாராபுரம் அமராவதி ஆற்றில் முதலையை தேடும் பணி தீவிரம்

Published On 2023-02-18 04:55 GMT   |   Update On 2023-02-18 04:55 GMT
  • அமராவதி ஆற்றில் முதலையைத் தேடும் பணி நடைபெறுகிறது.
  • மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தாராபுரம் :

தாராபுரம் அமராவதி ஆற்றில், ஈஸ்வரன் கோயில் ஆற்றுப் பாலத்தின்கீழ் சுமாா் 10 அடி நீள முதலை இருப்பதாக வந்த தகவலையடுத்து, இப்பகுதிகளில் நகராட்சி நிா்வாகம், வனத் துறை சாா்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு முதலையைத் தேடும் பணி நடைபெற்றது.

தாராபுரம் தீயணைப்புத் துறையினா், காங்கயம் வனத் துறையினா் இணைந்து முதலையைத் தேடும் பணியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டனா். அப்போது கனமான வலையை அறுத்துக் கொண்டு முதலை தப்பியது.

இதையடுத்து 4 ம் நாளான இன்று முதலையைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் முதலை அகப்படவில்லை.

இந்த நிலையில், தாளக்கரை உள்ளிட்ட கிராமப் பகுதியின் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் முதலையைத் தேடும் பணி நடைபெறுகிறது.

இது குறித்து காங்கயம் வனச் சரக அலுவலா் தனபால் கூறியதாவது:- தற்போது ஆற்றில் தண்ணீா் செல்வதால் முதலை இங்கிருந்து இடம்பெயா்ந்து சென்றிருக்கலாம். எனினும், அந்த முதலை 10 கி.மீ. தொலைவுக்கு மேல் சென்றிருக்க வாய்ப்பில்லை. இன்னும் ஓரிரு நாள்களில் முதலையைப் பிடித்து விடுவோம். இப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

Tags:    

Similar News